பட்ட பகலில் பெண்ணிடம் பணம் பறித்த பலே கில்லாடி.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..
பழனி பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் பெண்ணிடம் பணம் பறித்த நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் பெண்ணிடம் பணம் பறித்த நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்யா நகரில் உள்ள அண்ணாசாலை சேர்ந்த அழகர் மகன் 40 வயது மதிக்கத்தக்க தேவா என்பவர் மனைவியிடம் சண்டையிட்டு பழனி பேருந்து நிலையத்திலேயே சுற்றி திரிவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தாராபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தனது மகனை கரூருக்கு பஸ் ஏற்றி விட பேருந்து நிலையம் வந்துள்ளார். அங்கு பஸ் ஏற்றிவிட்டு சென்ற ராஜேஸ்வரியை பின் தொடர்ந்த தேவா அவரின் பர்ஸை பிடுங்கிக் கொண்டு ஓடியுள்ளார். அதிர்ச்சியுடன் அதனை கண்ட ராஜேஸ்வரி உடனே திருடன் திருடன் என்று கூச்சலிட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் தப்பித்து ஓடிய திருடன் தேவாவை கையும் களவுமாக விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து பழனி நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு ராஜேஸ்வரி போலீசாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தேவாவின் சொந்த ஊர் கொடைக்கானல் என தெரிய வந்தது. மேலும் பழனி சத்யா நகர் அண்ணாசாலையில் மனைவியுடன் வசித்து வந்த தேவா அடிக்கடி தனது மனைவியிடம் சண்டை போடுவதால் தனது மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.
அந்நிலையில் மனைவி சென்றதால் சாப்பாட்டு செலவிற்கு கூட பணம் இல்லாததால் பசிக்காக வேறு வழியின்றி திருடியதாக வாக்குமூலம் அளித்து தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார் தேவா.
பட்டப் பகலில் பொதுமக்கள் சுற்றி திரியும்பொழுதே இந்த திருட்டு சம்பவம் நடந்தது குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
What's Your Reaction?