‘எனது 6 மாத குழந்தையை கொசு கடிக்கிறது’-குவைத்தில் இருந்து தஞ்சைக்கு இ-மெயில் அனுப்பிய தந்தை
சுகாதார ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் சின்ன அரிசிக்காரத்தெருவுக்கு சென்று அந்த பகுதி முழுவதும் கொசுமருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தனது 6 மாத குழந்தையை கொசு கடிக்கிறது என தந்தை குவைத்தில் இருந்து தஞ்சை மாநகராட்சிக்கு இ-மெயில் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் தற்போது கொசுத்தொல்லைகள் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக மழைக்காலம் முடிந்ததையடுத்து, கொசுக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.மாலை 5 மணி முதல் கொசு தொந்தரவால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சிக்கு இ-மெயில் மூலம் குவைத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை பார்த்த அதிகாரிகள், அந்த கடிதத்தை காதர்உசேன் என்பவர் எழுதி இருந்தார்.அவர் தான் தஞ்சை மாநகராட்சி 30-வது வார்டில் உள்ள சின்ன அரிசிக்காரத் தெருவை சேர்ந்தவர் என்றும் தற்போது குவைத்தில் வேலை செய்து வருவதாக கூறி உள்ளார்.
சின்ன அரிசிக்காரத் தெருவில் வசிக்கும் தனது 6 மாத கைக்குழந்தையான அன்புமகளை கொசு கடிப்பதாகவும், கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து சுகாதார ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் சின்ன அரிசிக்காரத்தெருவுக்கு சென்று அந்த பகுதி முழுவதும் கொசுமருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?