“பராசக்தி” நாளை ரிலீஸ் இல்லை?சென்சார் சர்டிபிகேட் கிடைப்பதில் தாமதம்:சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏமாற்றம்
பராசக்தி திரைப்படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாளை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை மையமாக கொண்டு 60களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ள
படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தை போல ‘பராசக்தி’ படத்துக்கும் சென்சார் பிரச்சினை எழுந்துள்ளது. ‘பராசக்தி’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், எட்டு முதல் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நீக்கங்களை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதை நீக்க இயக்குநர் சுதா கொங்கரா மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் ‛பராசக்தி' திரைப்படத்தை பார்த்து சில காட்சிகளை நீக்க கூறினர். இதையடுத்து படக்குழு அதனை நீக்கி மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பியது. திரைப்படத்துக்கு யூ/ஏ சான்று வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது சென்சார் போர்டு ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளை தவிர இன்னும் கூடுதலாக 25 காட்சிகளில் ‛கத்தரி' போடும்படி கூறியுள்ளது. இதில் மாற்றம் செய்தால் அந்த திரைப்படத்தின் படைப்பின் சுவாரசியம் குறையும் என்று கூறப்படுகிறது.
இதனால் இயக்குநர் சுதா கொங்கரா தரப்பில் அதனை நீக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முதலில் நீக்கப்பட்ட காட்சிகளுடன் திரைப்படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பி வைக்கும்படி படக்குழு கோரிக்கை வைக்க உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் ‛பராசக்தி' திரைப்படம் திட்டமிட்டப்படி ஜனவரி 10ம் தேதி வெளியாக வாய்ப்பு இருக்காது. ஏனென்றால் ஒரு திரைப்படம் மறுஆய்வு குழுவிடம் சென்றால் குறைந்தபட்சம் 2 - 3 வாரங்கள் வரை காலம் எடுக்கும் என்கின்றனர்.
What's Your Reaction?

