50 தொகுதிகள் வேணும்: எடப்பாடியை சந்தித்து வலியுறுத்திய நயினார் நாகேந்திரன்
2021 சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகள் கேட்பது மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பாஜக பங்கு கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது பாஜக அதிமுக இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு புறப்பட்ட நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஆலோசனை நடத்தினோம். அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.
பா.ஜ.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம், போட்டியிட விருப்பமான தொகுதிகள், அமைச்சரவையில் பங்கா? போன்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?

