திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.40 கோடி உண்டியல் காணிக்கை

35 நாட்களில் பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 93 ரூபாய்  பணம் என தகவல்

Jan 6, 2024 - 16:57
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.40 கோடி உண்டியல் காணிக்கை

திருத்தணி முருகன் கோவிலில் 35 நாட்களில்  பக்தர்கள் செலுத்திய காணிக்கை 1 கோடியே 40 லட்சம் உண்டியல் வசூலாகியுள்ளது.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை பொருட்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.இந்த நிலையில் தேவர் மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. 

இதில் 100க்கும் மேற்பட்ட திருக்கோயில் ஊழியர்கள் பங்கேற்று காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 35 நாட்களில் பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 93 ரூபாய்  பணம், தங்கம் 429 கிராம், வெள்ளி 8,565 கிராம்,காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow