அரசு பள்ளி மாணவி உலக சாதனை முயற்சி

மாணவிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Nov 21, 2023 - 11:27
Nov 21, 2023 - 15:15
அரசு பள்ளி மாணவி உலக சாதனை முயற்சி

பட்டுக்கோட்டையில் 11ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவி வயிற்றில் மரப்பலகையை வைத்து இருசக்கர வாகனத்தை ஏற்றும் உலக சாதனை முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  11ம்  வகுப்பு படிக்கும் கராத்தே பயிற்சி பெற்ற  மாணவி சுசிஷாலினி (15) தனது வயிற்றில் மரப்பலகையை வைத்து தொடர்ச்சியாக 8 நிமிடம் 32 வினாடியில்,  62 முறை இருசக்கர  வாகனத்தை ஏற்றும் உலக சாதனைக்கான முன்னோட்ட செயல்திறனை நேற்று செய்து காட்டினார். 

பட்டுக்கோட்டை ஸ்ட்ரெட்ச் ஸ்போர்ட்ஸ் அரேனா ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் இந்த உலக சாதனை முயற்சியினை மாணவி சுசிஷாலினி செய்து காட்டினார். இந்த நிகழ்வின் மூலம் அவரது சாதனையை பதிவு செய்ய தன்னார்வலர்கள் மற்றும் ஸ்பான்சர்கள்  உதவியினை பெற்று வயிற்றில் ஏற்றிய இரு சக்கர வாகனத்தின் எண்ணிக்கை மற்றும்  கால அளவினை நீட்டித்து உலக சாதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முறையாக பயிற்சி மேற்கொண்டு உலக சாதனையை நிகழ்த்த அப்பகுதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow