தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்
1983ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1989ம் ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பாத்திமா பீவி(96)உடல்நலக்குறைவால் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உயிர் பிரிந்துள்ளது.
மறைந்த பாத்திமா பீவி உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி ஆவார்.இவர் தமிழக ஆளுநராகவும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
கேரளாவில் உள்ள பத்தினம்திட்ட மாவட்டத்தில் 1927ம் ஆண்டு பிறந்த பாத்திமா பீவி திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர் அரசு சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி படித்தார்.இதைத்தொடர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக சேர்ந்துள்ளார்.
1974ம் ஆண்டு மாவட்ட அமர்வு நீதிபதியாகவும், 1983ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1989ம் ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். கடந்த 1997ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராக இருந்தார்.
பாத்திமா பீவியின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நீதித்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?