பஞ்சாப்பை பதற வைத்த சம்பவம்..! 14 இளம்பெண்கள் அதிரடி கைது..
பல்வேறு பிரிவுகளின் கீழ் கைதுசெய்த போலீசார் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
பஞ்சாப் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை குறிவைத்து, ஒரு மர்மகும்பல் பல நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்ட வந்த நிலையில், அந்த சம்பவங்களில் தொடர்புடைய 6 வெளிநாட்டு பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், காபூர்தலா மாவட்டத்தில் சத்னம்புரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற வரீந்தர் சிங் மற்றும் அர்வீந்தர் குமார் ஒரு கும்பலிடம் வேறு வேறு இடங்களில் சிக்கி பணத்தை பறிகொடுத்து இருக்கின்றனர். இதைதொடர்ந்து தைரியமாக காவல்நிலையம் சென்று புகாரளித்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் வழிப்பறி கும்பலை தட்டி தூக்கியது.
அப்போது அவர்கள் பதுங்கியிருந்த இடங்களில் அதிரடி சோதனை நடத்தியபோது 14 இளம்பெண்கள் சிக்கினர். அதில் 6 பேர் நைஜீரியா மற்றும் கானா நாட்டுப்பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரையும் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைதுசெய்த போலீசார் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அவர்களுக்குப் பின்னால் இருந்து மூளையாக செயல்பட்டது யார் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய காவல் உயரதிகாரி கௌரவ் தீர், சத்னம்புராவின் அருகாமையில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் இருந்து அப்பெண்கள் வந்து வழிபறி சம்பவத்தில் ஈடுபட்டு சென்றதாக குறிப்பிட்டார். அத்துடன் இந்த விசயம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் இந்த பெண்கள் போலி புகார்களை அழித்து வழக்கில் சிக்க வைத்துவிடுவோம் என மிரட்டி, சம்பவங்கள் தொடர்பான புகார்கள் போலீசாருக்கு சென்றுவிடாமல் செயல்பட்டு வந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கௌரவ் கூறினார்.
What's Your Reaction?