“மக்களே உஷாரா இருங்க” 215 மருந்துகளுக்கு தடை?: மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் வார்னிங்
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடந்தப்பட்ட சோதனையில், 215 மருந்துகள் தரமற்றவை என்பதும், மூன்று மருந்துகள் போலி என்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்துள்ளது. இந்த மருந்துக்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.
தரமற்ற மருந்துகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அடிக்கடி மருந்தங்கள், மருந்து உற்பத்தி செய்யும் இடங்களில் சோதனை மேற்கொள்கின்றன.
இந்த சோதனைகளின் போது தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால். அதனை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டுவாரியம் தடை விதித்து வருகிறது. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு மேற்கொள்ளப்பட்டது.. அவற்றில் காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான, 215 மருந்துகள் தரமற்றவையாகவும், மூன்று மருந்துகள் போலியானதாகவும் என்பதை மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுபிடித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது. இந்த மருந்து விபரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in/என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இவற்றை பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
What's Your Reaction?

