அமலாக்கத்துறைமுன் ஆஜராகத் தயார்.. ஆனா நேர்ல வர முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால்

8 முறை தொடர் சம்மன்களுக்குப்பின் மதுபானக் கொள்கை விவகார வழக்கில் நேரில் ஆஜராகத் தயார் என அமலாக்கத்துறைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்.

Mar 4, 2024 - 10:01
அமலாக்கத்துறைமுன் ஆஜராகத் தயார்.. ஆனா நேர்ல வர முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால்

கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து வழக்கை கையிலெடுத்த CBI - அமலாக்கத்துறையினர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்டோரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும், தேர்தல் நெருங்கும் வேளையில் தன்னை கைது செய்ய சதி நடப்பதாகக் கூறி அவற்றை கெஜ்ரிவால் புறக்கணித்தார். இதையடுத்து மார்ச் 4ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கடந்த 27ம் தேதி 8வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் சம்மன் சட்டவிரோதமாக உள்ளபோதும் அதற்கு பதிலளிக்கத் தயார் என அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மார்ச் 12ம் தேதிக்குப்பின் அமலாக்கத்துறை ஒரு தேதியை குறிப்பிட்டால், காணொலி வாயிலாக ஆஜராகி விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow