கொங்கு மண்டலத்தை எஸ்.பி.,வேலுமணியால் கட்டிப்போட்ட அதிமுக.. தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது..
பொறுப்பாளர்கள் அனைவரும் தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் - அதிமுக
மக்களவை தேர்தலை முன்னிட்டு 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. அந்த வகையில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - வடசென்னை
தமிழ்மகன் உசேன் - மத்திய சென்னை
பா.வளர்மதி – காஞ்சிபுரம்
கே.சி.வீரமணி - அரக்கோணம், திருவண்ணாமலை, வேலூர்
கே.பி.முனுசாமி - கிருஷ்ணகிரி
தம்பிதுரை - வேலூர்
கே.பி.அன்பழகன் - தருமபுரி
சி.வி.சண்முகம் - விழுப்புரம், கடலூர், புதுச்சேரி
ஓ.எஸ்.மணியன் – மயிலாடுதுறை, நாகை
நத்தம் விசுவநாதன் - திண்டுக்கல், மதுரை
சி.விஜயபாஸ்கர் – திருச்சி, கரூர்
செல்லூர் ராஜூ – மதுரை
ஆர்.பி.உதயகுமார் – தேனி, ராமநாதபுரம்
கே.டி.ராஜேந்திர பாலாஜி – விருதுநகர், ராமநாதபுரம்
கடம்பூர் ராஜூ - தூத்துக்குடி
செங்கோட்டையன் – ஈரோடு, திருப்பூர்
எஸ்.பி.வேலுமணி - திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி
உட்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்கள் அனைவரும் இன்று முதல் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் எனவும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?