காரைக்குடி: 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 6 பேர் கைது

சிறுமியை தேடி அவரது வீட்டிற்கு சென்ற சூர்யா மற்றும் நிஷாந்தை  அப்பகுதி பொதுமக்கள் பிடித்து தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Dec 8, 2023 - 15:11
Dec 8, 2023 - 15:37
காரைக்குடி: 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 6 பேர் கைது

காரைக்குடியில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 6 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை செஞ்சை கீழ ஊரணி பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் காதலிப்பது போல நடித்துள்ளார். பின்பு காரைக்குடி புதிய அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள தைல மரக்காட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தமது நண்பர்களை செல்போனில் அழைத்து அவர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின்  நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட தாயார் அவரிடம் விசாரணை செய்ததில் நடந்த விபரங்களை அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதனிடையே சிறுமியை தேடி அவரது வீட்டிற்கு சென்ற சூர்யா மற்றும் நிஷாந்தை  அப்பகுதி பொதுமக்கள் பிடித்து தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில், சூர்யா மற்றும் நிஷாந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேலும் 6 பேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து  பாலா,கவின் உட்பட 6 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow