வெள்ள பாதிப்புக்கான நிவாரணம் குறித்து -அமைச்சர் பெரியசாமி தகவல்

முழு பாதிப்பு குறித்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை  சமர்ப்பித்து அதற்கான நிவாரணத் தொகை ஒதுக்க தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்படும்

Dec 8, 2023 - 15:44
Dec 8, 2023 - 20:26
வெள்ள பாதிப்புக்கான நிவாரணம் குறித்து -அமைச்சர் பெரியசாமி தகவல்

வெள்ளம் பாதித்த நான்கு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த அயப்பக்கத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி உள்ளிட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அயப்பாக்கம் ஊராட்சி சார்பில் 1000க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி, பிரட், பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். பின்னர் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

அயப்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க சமைக்கப்பட்டு இருந்த உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து அமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் வந்திருந்த அமைச்சர் மூர்த்தி, எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, கணபதி ஆகியோரும் மக்களுக்கு வழங்கப்பட இருந்த உணவை சாப்பிட்டு தரத்தை சோதனை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி,  ”நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறைந்து விட்டது. சுகாதாரம் பணிகள்  முடுக்கிவிடப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை நீர் நிலைகள் அதிகம் உள்ள பதகுதி என்பதால் தண்ணீர் வடிய தாமதம் ஆகும். பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் முதலமைச்சர் ஆராய்ந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் முதலமைச்சர் அறிவிப்பார்.

புயல் நிவாரணமாக ஒன்றிய அரசிடம் 5060 கோடி நிவாரணத்தொகை கேட்கப்பட்டிருந்த நிலையில், முதல் கட்ட பாதிப்பு குறித்து மட்டுமே நிவாரணத் தொகை கேட்கப்பட்டிருப்பதாகவும், முழு பாதிப்பு குறித்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை  சமர்ப்பித்து அதற்கான நிவாரணத் தொகை ஒதுக்க தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow