வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி: நண்பர்கள் சீரழித்த அவலம்

வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமியை நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்து சிறுமியின்  பெற்றோர் போலீசில் புகார் அளித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Jun 26, 2026 - 10:54
வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி: நண்பர்கள் சீரழித்த அவலம்
நண்பர்கள் சீரழித்த அவலம்

சென்னையை அடுத்த மவுலிவாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி காணவில்லை என பெற்றோர் தேடி வந்தனர்.  இந்த நிலையில் காணாமல் போன சிறுமி வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. நண்பர்கள் போதையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மௌலிவாக்கம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகார் போரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மகளிர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் இருந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் நண்பர்கள் அழைத்து சென்று தங்கி இருந்த அறையில் போதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow