2026 உலகக்கோப்பை கால்பந்து: டிரம்ப் அழைப்பை புறக்கணித்த இத்தாலி அணி 

கால்பந்து உலகக் கோப்பையை நான்கு முறை வென்ற இத்தாலி அணி ஈரானுக்குப் பதிலாக 2026 உலகக் கோப்பையில் பங்கேற்க டிரம்ப் விடுத்த அழைப்பினை புறக்கணித்துள்ளது.

2026 உலகக்கோப்பை கால்பந்து: டிரம்ப் அழைப்பை புறக்கணித்த இத்தாலி அணி 
டிரம்ப் அழைப்பை புறக்கணித்த இத்தாலி அணி 

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் ஜூனில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற இருக்கின்றன. இதில் ஈரான் விளையாட தேர்வாகியிருந்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அணி பங்கேற்பதை விரும்பாமல் இருக்கிறார்.இந்த நிலையில், டிரம்ப்பின் உடனிருக்கும் அதிகாரிகள் உலகக் கோப்பையில் ஈரானுக்குப் பதிலாக கலந்துகொள்ளுமாறு இத்தாலியிடம் அணிக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

இது குறித்து டிரம்பின் நண்பரும் பாலோ ஸாம்போலி, "எனது கோரிக்கை அரசியல் ரீதியானது அல்ல; ஈரான் ஒருவேளை கடைசி நேரத்தில் விளையாடாமல் சென்றால் அதற்கான திட்டம்தான். எனக்கு கனவு வந்தது. எனது கோரிக்கை இத்தாலிய மற்றும் இத்தாலிய அமெரிக்க மக்களுக்கு மட்டுமே" என்றார்.அமெரிக்காவின் இந்த அழைப்பு குறித்து இத்தாலி  நாட்டின் விளையாட்டுதுறை அமைச்சர் ஆண்ட்ரியா அபோடி, " முதலில் இதற்கு வாய்ப்பில்லை; இரண்டாவதாக இது நல்ல யோசனையும் அல்ல" எனக் கூறினார்.

கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த இத்தாலி அணியின் பயிற்சியாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். நான்கு முறை சாம்பியனான இத்தாலி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறாமல் உள்ளது குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow