2-ம் கட்ட தேர்தல் நிறைவு.. ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்.. எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு சதவீதம் தெரியுமா?

Apr 27, 2024 - 06:18
2-ம் கட்ட தேர்தல் நிறைவு.. ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்.. எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு சதவீதம் தெரியுமா?

கேரளா, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. 

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகி இருந்தன. 

இதையடுத்து நேற்று  (ஏப்ரல் 26)  இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், அசாம், சத்தீஸ்கர், மணிப்பூர், மேற்கு வங்காளம், திரிபுரா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 

காலை 7 மணி்க்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். 88 தொகுதிகளில் மொத்தமாக காலை 9 மணி நிலவரப்படி 11.1% வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 25.1% வாக்குகளும், 1 மணி நிலவரப்படி 39.13%, 3 மணி நிலவரப்படி 50.25% வாக்குகளும், 5 மணி நிலவரப்படி 64% வாக்குகளும் பதிவாகின. 

இதில்,  மாநிலங்கள் வாரியாக 5 மணி நிலவரப்படி, 
அஸ்ஸாம் : 70.66% ( 5 தொகுதிகள் )3 தொகுதிகள்    
பீகார் : 5 தொகுதிகள் - 53.03%
சத்தீஸ்கர் : 3 தொகுதிகள் - 72.13%
ஜம்மு-காஷ்மீர் : 1 தொகுதி - 67.22%
கர்நாடகா : 14 தொகுதிகள் - 63.90%
கேரளா : 20 தொகுதிகள் - 63.97%
மத்திய பிரதேசம் : 7 தொகுதிகள் - 54.83%
மகாராஷ்டிரா : 8 தொகுதிகள் - 53.51%
மணிப்பூர் : 1 தொகுதி - 76.06%
ராஜஸ்தான் : 13 தொகுதிகள் -  59.19%
திரிபுரா : 1 தொகுதி - 77.53%
உத்தரபிரதேசம் : 8 தொகுதிகள் - 52.74%
மேற்குவங்கம் : 3 தொகுதிகள் - 71.84%. வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow