திருப்பத்தூரில் நுங்கு, இளநீர் வியாபாரம் படுஜோர்.. பழக்கடைகளில் குவியும் மக்கள்..

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் நுங்கு, இளநீர், வெள்ளரிப்பழம், தர்பூசணி உள்ளிட்டவைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

Apr 26, 2024 - 21:28
திருப்பத்தூரில் நுங்கு, இளநீர் வியாபாரம் படுஜோர்.. பழக்கடைகளில் குவியும் மக்கள்..

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஈரோடு, திருச்சி, வேலூர், திருப்பத்தூரில் வெயிலின் தாக்கம் மற்ற பகுதிகளை காட்டிலும் அதிகமாகவே உள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்,கந்திலி மற்றும் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் நாளுக்கு நாள் அதிகரித்து, அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பம் நிலவுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடபட்டுள்ளது. இதன் காரணமாக மதிய நேரத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதும், நுங்கு, இளநீர், தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை உட்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு, இளநீர், தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஒரு காலத்தில் நூறு நுங்கு 60 ரூபாய்க்கு விற்கப்பட்டிருந்த நிலையில் இன்று 100 நுங்கு 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நுங்கு வெட்ட மரங்களில் ஏற ஆள் பற்றா குறையாலும், விளைச்சல் இல்லாத காரணத்தினால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று நுங்கு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow