வில்லியனூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை-சிறுவன் உட்பட 4 பேர் கைது

ரவுடி ஜீவா, ஞானபிரகாசம், சந்துரு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Jan 17, 2024 - 15:59
வில்லியனூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை-சிறுவன் உட்பட 4 பேர் கைது

புதுச்சேரி வல்லியனூரில் பிரபல ரவுடி தனபாலுவை வெட்டிக்கொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி வில்லியனூர் அருகே உருவையாறு காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மகன் தனபால் (வயது22). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளது.இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் வில்லியனூர் கண்ணகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நாதன்நகர் வழியே சென்ற தனபாலை, 5 பேர் கொண்ட கும்பல் ஓடஓட சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தனபாலின் தந்தை கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.முதல் கட்ட விசாரணையில் தனபால் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல் தெரிய வந்தது.

தனபால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலில் ஞானபிரகாசின் வலது கையை வெட்டி துண்டாக்கினார்.அறுவை சிகிச்சை மூலம் கையை சரி செய்துக்கொண்ட ஞான பிரகாஷ், பழிக்கு பழியாக தனபாலின் வலது கையை வெட்ட முடிவு செய்து இருந்தார்

இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த தனபால், ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் உறுவையாறுக்கு வந்துள்ளார்.அன்று மாலை அங்கு நடந்த கபடி போட்டியை தனபால் பார்க்க சென்றார்.அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த பூவரசன் என்பவருடன் தனபால் தகராறு செய்தார்.

இதுபற்றி இதுபற்றி  பூவரசன் தனது அண்ணனான பிரபல ரவுடி ஜீவாவிடம் முறையிட்டார்.ஏற்கனவே ஞானபிரகாசத்துடன் தனபாலுக்கு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மீண்டும் தனபால் தகராறு செய்ததால் அவரை தீர்த்து கட்ட ஜீவாவும், ஞானபிரகாசமும் முடிவு செய்தனர்.சம்பவம் நடந்த இரவு சமாதானம் செய்யலாம் என கூறி ஜீவா, ஞானபிரகாசம், சந்துரு மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தனபாலுவை வில்லியனூருக்கு அழைத்து சென்றனர்.கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே சென்றபோது திடீரென தனபாலை கொல்ல அரிவாளை எடுத்ததும் தனபால் அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடினார்.ஆனால் ஜீவா உள்ளிட்ட 4 பேரும் தனபாலுவை விரட்டி சென்றனர்.

சிறிது தூரத்தில் சுற்றி வளைத்த அவர்கள் தனபாலுவின் வலது கையை ஞானபிரகாசம் கத்தியால் வெட்டி துண்டித்து பழி தீர்த்துக் கொண்டார்.மற்ற 3 பேரும் தன்பாலுவை தலை, மார்பு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்
சென்றது தெரியவந்தது.இந்த கொலையில் தொடர்புடைய ரவுடி ஜீவா, ஞானபிரகாசம், சந்துரு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

-பி.கோவிந்தராஜு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow