கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி.. வேளாண் பட்ஜெட்டில் அமைச்சரின் அறிவிப்பு..! என்னென்ன அறிவிப்புகள்..!

தென்னை சாகுபடியை ஊக்குவிக்க 7 லட்சம் தரமான தென்னை நாற்றுகள் ரூ.4.80 கோடி செலவில் வழங்கப்படும்

Feb 20, 2024 - 12:42
கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி.. வேளாண் பட்ஜெட்டில் அமைச்சரின் அறிவிப்பு..! என்னென்ன அறிவிப்புகள்..!

ஆதி திராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தென்னை சாகுபடியை ஊக்குவிக்க 7 லட்சம் தரமான தென்னை நாற்றுகள் ரூ.4.80 கோடி செலவில் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 15,280 கிராமங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறினார். பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக மாற்ற 100 இளைஞர்களுக்கு வங்கிக்கடன் உதவியுடன் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் எனவும் 3 உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

ஆதி திராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்கப்படும் எனவும் பலன் தரும் பருத்தி உற்பத்தித் திட்டத்திற்கு ரூ.14.20 கோடியும் சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை உயர்த்த ரூ.12.40 கோடியும் ஒதுக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார். சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் மாநில நிதி ரூ.5 கோடியில் 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய அமைச்சர், அத்தி, கொடிக்காய்ப்புளி போன்ற பழங்களை பயிரிட ரூ.3.70 கோடி மானியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.3.46 கோடி ஒதுக்கப்படுவதாகவும், தென்னை சாகுபடியை ஊக்குவிக்க 7 லட்சம் தரமான தென்னை நாற்றுகள் ரூ.4.80 கோடி செலவில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow