விஜய் காரை முற்றுகையிட்ட அதிருப்தி நிர்வாகிகள் : பனையூர் தவெக அலுவலகத்தில் பதற்றம்

தூத்துக்குடி அதிருப்தி நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் காரை தாக்கி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

விஜய் காரை  முற்றுகையிட்ட அதிருப்தி நிர்வாகிகள்   : பனையூர் தவெக அலுவலகத்தில் பதற்றம்
Disgruntled executives blockade Vijay's car:

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள முன்கூட்டியே ஆயத்தமாகி வரும் சூழலில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவருமான விஜய், தனது கட்சியுடன் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கத் தயாராகி வருகிறார். 

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை பேனரில் பயன்படுத்தியதற்காக வட்டச் செயலாளரை கட்சியில் இருந்து நீக்கியதாக திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் டிசம்பர் 14-ம் தேதி  போரட்டம் நடத்தினர்.

2 வருடங்களாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாமல் உள்ளனர். இன்றைய தினம் தவெக தலைமை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நியமனம் அறிவிப்பு வெளியாகும் என்பதால், காலை முதலே தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பனையூர் தலைமை அலுவலகத்தில் அதிக அளவில் குவிந்து இருந்தனர். 

அலுவலகத்தில் அதிருப்தி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் அதிக அளவில் பவுன்சர்கள் தவெக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் மதியம் 1.30 மணியளவில் தவெக அலுவலகத்திற்கு வருகை தந்த விஜயின் காரை தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட முயன்றனர். 

அப்போது விஜயின் காரை அதிருப்தி நிர்வாகிகள் அடித்தனர், அதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் பெண்நிர்வாகி அவரது ஆதரவாளர்களை தடுத்து, விஜய் காரை மீட்டு அலுவலகத்திற்கு உள்ளே அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow