ராகுல்காந்திக்கு தமிழக பாஜக கேள்வி
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது ஒன்றைதான் குறிக்கோள் என்று செயல்பட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் அமலாக்கத்துறை வரலாற்றில் பார்க்காத ஒன்று இதுக்குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தி ஏன் வாய் திறக்காமல் உள்ளனர் என தமிழக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கேள்வி எழுப்பி உள்ளார்.
தஞ்சையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், “கடந்த 4 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகு என்பவர் வீட்டில் ரூ 350 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.இதுவரை இந்த நாட்டில் நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ரெய்டு ஆகியவற்றில் இவ்வளவு பெரிய தொகை அளவிற்கு பணத்தை பதுக்கி வைத்து கைப்பற்றப்படவில்லை.
இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் எம்.பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவர்களுடைய கூட்டணியே ஊழல் செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி.மேலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக கட்சி ஸ்பெக்ட்ரம் தொலைத்தொடர்பு ஊழல் செய்தது.அது விசாரணைக்கு வர உள்ளது.விரைவில் தீர்ப்பு வந்து சிறைக்கு செல்வார்கள்.
தற்போது அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது ஒன்றைதான் குறிக்கோள் என்று செயல்பட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணியில் இருக்கக்கூடிய அத்தனை பேருமே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள். இந்திய நாட்டு மக்களின் பெரும்பான்மை கனவாக இருந்த அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற பணி தற்போது நடைபெற்று முடிந்து ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி ஆட்சியில் எல்லா திட்டங்களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் யாரையும் விட மாட்டேன், மக்கள் பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுப்பது இதுதான் பிரதமரின் உத்தரவாதம் என்று கூறினார்.
What's Your Reaction?