அரசு பள்ளியில் நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்த 4ம் வகுப்பு மாணவர்கள்!

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பள்ளியில் நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்த 4ம் வகுப்பு மாணவர்கள்!

சென்னை அம்பத்தூர் 7வது மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது. பள்ளி வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை மாணவர்கள் பிளாஸ்டிக் பக்கெட் கொண்டு தொட்டியின் மீது ஏறி சுத்தம் செய்யும் காட்சி  வெளியாகி உள்ளது.

அச்சம் இல்லாமல் தடுப்பு சுவர் இல்லாத மொட்டை மாடி மீது நின்று தொட்டில் மீது ஏறி சுத்தம் செய்யக்கூடிய வீடியோ வெளியானது.அவர்களுக்கு மேல் ஒரு மின் கம்பி ஒன்று செல்கிறது. உயிர் பயம் இல்லாமல் அச்சமில்லாமல் மாணவர்கள் சுத்தம் செய்தனர்.அந்த மாணவர்கள் தலைமை ஆசிரியர்தான் சுத்தம் செய்ய சொன்னார்கள் என்று சொல்லக்கூடிய ஆடியோ இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow