புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 டன் வாழைப்பழங்களை அனுப்பிய விவசாயி 

4 டன் வாழை பழங்களை தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியாவிடம் வழங்கினார்.

Dec 12, 2023 - 12:38
Dec 12, 2023 - 17:27
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  4 டன் வாழைப்பழங்களை அனுப்பிய விவசாயி 

மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி ஒருவர் 4 டன் வாழை பழங்களை அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அடுத்த வடுகக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்.வாழை விவசாயியான இவர் நூற்றுக்கனக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் செய்து வருகிறார்.

மிக் ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தண்ணீரால் வீடுகள் சூழ்ந்து ஏராளமானவர்கள் தவித்தனர். இன்றும் சில பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணிய வாழை விவசாயி மதியழகன். பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம். போகும்போது என்ன கொண்டு போக போகிறோம். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தமிழர்களின் பண்பாடு என்ற வார்த்தை வரிகள் நினைவுக்கு வர உடனே தனது தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த பூவன், ரஸ்தாளி, செவ்வாழை பழங்களை வழங்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி 4 டன் வாழை பழங்களை தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியாவிடம் வழங்கினார்.தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து டாடா ஏசி வாகனம் மூலம் குன்றத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow