ஜாதி அவதூறு பேசிய ஆசிரியர் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

எங்களிடம் மீண்டும் இவ்வாறு நடந்து கொண்டால் உங்களுக்கு டிசி-யை கொடுத்துவிடுவோம் என்றும் பிராக்கடிக்கல் மார்க்கை குறைத்து விடுவோம் என்று ஆசிரியர் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

Dec 12, 2023 - 12:18
Dec 12, 2023 - 17:24
ஜாதி  அவதூறு பேசிய ஆசிரியர் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

ஜாதி பெயர் குறித்து அவதூறு பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியில் பயிலும் மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன் குமாரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.அந்த பள்ளியில் அம்மாபேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த 6ம் தேதி அன்று எங்களது ஆங்கில வகுப்புக்கான ஆசிரியர் வகுப்பிற்கு வராததால் விவசாய பிரிவு ஆசிரியர் எங்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டார்.
அவர் அப்போது எங்களது வகுப்பில் பீரோவில் இருந்த அருவாளை மைதானத்தில் வேலை செய்து கொண்டிருந்தர்வகளிடம் கொடுத்துவிட்டு உடனேயே வருமாறு சொன்னார்.

நான் மைதானத்திற்கு சென்றபோது அங்கே நின்று கொண்டிருந்த விளையாட்டு துறை ஆசிரியர் நக்கீரன் என்னை பார்த்து பாய் இங்கே வாடா என அழைத்து நீ எதுக்குடா தாழ்த்தப்பட்ட பசங்க கூட கெட்டு பேற, அவனுங்களோட சேராத என்று சென்னார். அதற்கு நான் நீங்க ஏ சார் இத சொல்றீங்க அவர்கள் எல்லாம் என் நண்பர்கள் என்றேன். இதை பார்த்த என் நண்பர்கள் ஆசிரியரிடம்  ஏன் கோவமாக பேசினாய் என்று கேட்டார்கள்.

நான் அவர்களிடம் நடந்தவற்றை சொன்னேன். மறுநாள் 7ம் தேதி  ஆசிரியர் நக்கீரன் எங்களது  வகுப்பு அறைக்கு வந்தார்.அப்போது வகுப்பில் இருந்த மாணவர் தருண்,  ஆசிரியர் நக்கீரனிடம் நேற்று ஏன் சாதியை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு நான் அப்படி சொல்லவில்லையே என்று மறுத்தார்.அப்போது வகுப்பில் இருந்த மாணவர்கள் பலர் ஆசிரியர் நக்கீரன் சாதி ரீதியான கண்டனத்தை தெரிவித்தார்கள். இதனால் கோபம் அடைந்த நக்கீரன் தாழ்த்தப்பட்ட ஜாதி என்றால் பெரிய ஆளா என தகாத வார்த்தையால் பேசி எங்களை அடிக்க வந்தார்.நாங்கள் விலகி கொண்டோம்.

பின்பு ஆசிரியர் நக்கீரன் எங்களிடம் மீண்டும் இவ்வாறு நடந்து கொண்டால் உங்களுக்கு டிசி-யை கொடுத்துவிடுவோம் என்றும் பிராக்கடிக்கல் மார்க்கை குறைத்து விடுவோம் என்றும் அச்சுறுத்துகிறார்கள்.

மேலும் மாணவர்களை சாதி ரீதியாக பிளவுப்படுத்தி பல மாணவர்கள் முன்னிலையில் பட்டியல் சமூக மாணவர்களை ஆபாசமான வார்த்தைகளால் சொல்லி அச்சுறுத்திய விளையாட்டுத்துறை ஆசிரியர்  நக்கீரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதை எடுத்து முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலரை பள்ளிக்கு நேரில் சென்று விசாரிக்குமாறு அனுப்பி வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow