ஜி20 மாநாடு குறித்த சிறப்பு கருத்தரங்கை தொடங்கி வைத்த கவர்னர்

கார் மூலம் புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு இரவு வந்தார்.

Dec 14, 2023 - 15:40
Dec 15, 2023 - 17:32
ஜி20 மாநாடு குறித்த சிறப்பு கருத்தரங்கை தொடங்கி வைத்த கவர்னர்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜி20 மாநாடு குறித்த சிறப்பு கருத்தரங்கை கவர்னர் தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜி 20 மாநாடு குறித்து ஒரு நாள் சிறப்பு கருத்தரங்க தொடக்கவிழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

துணைவேந்தர் ராம.கதிரேசன் வரவேற்புரையாற்றினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பதிவாளர் சிங்காரவேலு, கருத்தரங்கு அமைப்பு செயலாளர் ரமேஷ்குமார், அறிவுடைநம்பி ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் 3 அமர்வுகளாக தொழில்நுட்பம், பருவநிலை, வேளாண்மை, உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது.

கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்னை கவர்னர் மாளிகையிலிருந்து கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை கார் மூலம் புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு இரவு வந்தார். அவரை கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் சிங்காரவேலு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர், பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கிய கவர்னர் சிறப்பு கருத்தரங்கை இன்று தொடங்கி வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow