ககன்யான்; விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி !!

ககன்யான் திட்டத்தால் விண்வெளித்துறை ஒரு புதிய உயரத்தை எட்டும்

Feb 27, 2024 - 13:59
ககன்யான்; விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி !!

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின்படி பயணிக்கவுள்ள வீரர்களை கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். 

இந்தியாவில் இருந்து முதன்முதலாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின்படி, 3 நாள் பயணமாக 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் ஆய்வு மேற்கொண்டு பத்திரமாக இந்தியப் பெருங்கடல் தளத்தில் தரையிறங்கும் வகையில் ககன்யான் மிஷன் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ககன்யான திட்டப்பணிகளை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திரமோடி கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு சென்றடைந்தார். விக்ரம் சாராபாய் ஆய்வு மையத்தில் ஆளுநர் ஆரிஃப் கான், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வுசெய்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ககன்யான் திட்டத்தின்படி விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டார்.

இதையடுத்து பிரசாந்த், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்சு சுக்லா ஆகிய 4 பேரையும் அவர் அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 2035ம் ஆண்டுக்குள் இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் அமைக்கப்படும் எனவும் இதன்மூலம் விண்வெளியின் அறியப்படாத உண்மைகள் வெளிக்கொணரப்படும் எனவும் கூறினார். உலகின் 3வது பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் வேளையில், ககன்யான் திட்டத்தால் விண்வெளித்துறை ஒரு புதிய உயரத்தை எட்டும் எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow