சென்னை சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு - வேதனையில் விஜய்

மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும்

Oct 7, 2024 - 14:38
சென்னை சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு - வேதனையில் விஜய்

சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. வானத்தில் போர் விமானங்கள் நிகழ்ச்சியை காண சென்னை, திருச்சி, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடும் வெயில் காரணமாகவும், கூட்ட நெரிசல், பல்வேறு மருத்துவ காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 5 பேர் உயிரிழந்ததற்கு தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,  “சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow