காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்... ஹமாஸ் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் பலி
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹாமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதையடுத்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உட்பட 3 பேர் உயிரிழந்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து தீமைக்கு மரண அடி விழுந்துள்ளது எனவும், பிணை கைதிகளை விடுவிக்கும் வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்தது, இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் நல்ல நாள் என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?