மழை வெள்ளத்தால் 60 வருடம் பழமையான பாலம் இடிந்து சேதம்
மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் சுமார் 20 கிலோமீட்டர் சுற்றி வெளியில் வரும் நிலை ஏற்பட்டுள்ளது
மழை வெள்ளத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள 60 வருடம் பழமையான பாலம் இடிந்து சேதமடைந்தது.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் பல்வேறு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுவரை மூன்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே மேலப்பாளையம், நெல்லை சந்திப்பு, டவுன் கருப்பன் துறை விளாகம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 1958ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பிரதான தரைபாலம் பாலம் உள்ளது.இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் பல வெள்ளங்களை கண்ட இந்த பாலம் தற்போது ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் இடிந்து சேதமானது.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் சுமார் 20 கிலோமீட்டர் சுற்றி வெளியில் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே உடனடியாக இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?