தஞ்சாவூரில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டாவாறே வாகனங்கள் சென்றனர்.சம்பா சாகுபடி பால் பிடிக்கும் தருவாயில் மழையால் பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு 1,608 மில்லி மீட்டர் அளவும், அதே போல் கடந்த 2022 ஆம் ஆண்டு 1,164 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.ஆனால் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் போதிய மழை அளவு இல்லாமல் சராசரியாக அளவை விட வெறும் 873 மிமீ அளவு மட்டுமே மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் தூறல் மழை பல்வேறு பகுதிகளில் பெய்து வந்தது.இந்நிலையில் இன்று காலை முதல் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, மருங்குளம், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதி பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரியாக மழை அளவு குறைந்ததால் சம்பா தாளடி சாகுபடி செய்திருந்த விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதாலும், சம்பா சாகுபடி தற்போது பால் பிடிக்கும் தருவாயில் இருப்பதாலும் இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
What's Your Reaction?