நெல்லை: மாணவன் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடிய பெற்றோர் உள்பட 19 பேர் கைது
மாணவனின் தாய் மாரியம்மாள் தந்தை நாகராஜன் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்து அங்கிருந்து வேனில் அழைத்துச் சென்றனர்.
நெல்லையில் 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராடிய பெற்றோர் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த நாகராஜன்-மாரியம்மாள் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நரேன் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தான். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு நரேன் திடீரென வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாளையங்கோட்டை போலீசார் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். மாணவன் பள்ளி கட்டணம் செலுத்தாததால் சக மாணவர்கள் முன்னிலையில் சிறுவன் நரேனை பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்தவும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில் தான் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளன்னர்.’
அதேசமயம் கட்டணத்துக்காக மாணவன் நரேனை அவமானப்படுத்தவில்லை எனவும் அடிக்கடி நரேன் விடுமுறை எடுத்ததாகவும் போலீசாரிடம் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கிடையில் மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு நேற்று காலை முதல் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
சாலை மறியல் ஈடுபட முயன்றபோது அங்கிருந்த போலீசார் அவர்களை முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஓரமாக அப்புறப்படுத்தினர்.இருப்பினும் மாணவனின் பெற்றோர் உள்பட அனைவரும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி எதுவும் இல்லாமல் இதுபோன்று போராட்டம் நடத்த கூடாது. இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனாலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாணவனின் தாய் மாரியம்மாள் தந்தை நாகராஜன் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்து அங்கிருந்து வேனில் அழைத்துச் சென்றனர்.
கல்வி கட்டணத்திற்காக சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் தான் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராடியவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?