புல்வாமா தாக்குதலின் 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு

துணை ராணுவப்படை மீது பயங்கரவாத தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்ட கறுப்பு நாளின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Feb 14, 2024 - 12:33
Feb 14, 2024 - 13:14
புல்வாமா தாக்குதலின் 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு

ஜம்முகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 40 பேர் உயிரிழந்த சம்பவத்தின் 5-ம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வாகனத்தில் சென்று கொண்டிருந்த துணை ராணுவப்படையினர் மீது ஜெயிஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படை பயங்கரவாதி அடில் அகமது வெடிகுண்டுகளுடன் விழுந்தார். இதில் பேருந்து வெடித்துச் சிதறியதில் 40 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்தத் தாக்குதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமையின் விசாரணையில், மசூத் அசார் மற்றும் அவரது சகோதரர்கள் அப்துல் ரவூப் அஸ்கர் மற்றும் மௌலானா அம்மார் அல்வி ஆகியோரது தூண்டுதலின் பேரிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்தது. இதற்குப் பிறகு, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய ராணுவத்தின் 2,000 விமானங்கள் பாகிஸ்தான் புறப்பட்டுச்சென்று, பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.அதில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

துணை ராணுவப்படை மீது பயங்கரவாத தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்ட கறுப்பு நாளின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow