காஞ்சி: 2400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
2400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மதிவண்டிகளை எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 2400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மதிவண்டிகளை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்துக்கொண்டு அந்திரசன் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி,சி.எஸ்.எம்.மேல்நிலைப் பள்ளி, தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 6 பள்ளிகளில் பயிலும் 1011 பள்ளி மாணவர்களுக்கும் அதேபோல் பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.கே.வி.மேல்நிலைப்பள்ளி,மரியா ஆக்ஸலியம் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளில் பயிலும் 1397 மாணவிகள் என மொத்தம் 2400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மதிவண்டிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கியுள்ள பயனுள்ள திட்டங்கள்,அதனால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்டவைக்குறித்து அவர் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,பகுதி செயலாளர் திலகர், தசரதன்,வெங்கடேசன்,பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
What's Your Reaction?