"ரவுடி பேபி சூர்யா என்னை கொலை செய்ய பார்க்கிறார்" - பெண் பரபரப்பு புகார்...

ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 3 பேர், தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாக பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Apr 1, 2024 - 20:37
"ரவுடி பேபி சூர்யா என்னை கொலை செய்ய பார்க்கிறார்" - பெண் பரபரப்பு புகார்...

ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 3 பேர், தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாக பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

யுடியூபில் பல வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் ஆன சூர்யா மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ள நிலையில், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சித்ரா என்பவர் அவர் மீது மேலும் ஒரு புகாரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார். 

சித்ரா தனது புகார் மனுவில் "மக்கள் பார்வை என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறேன். அதன் மூலம் சூர்யாவின் 2-வது கணவரான சிக்கந்தரின் பெண் தோழியான சுமிக்கு ரூ.1.74 லட்சம் கொடுத்துள்ளேன். முதலில் சுமி, சிக்கந்தரின் மனைவி என்றே தன்னிடம் அறிமுகம் ஆனார். பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் உள்ளதாக என்னிடம் கூறியதால் அவருக்கு பணம் கொடுத்து உதவினேன். ஆனால் தற்போது சூர்யா, சிக்கந்தர், சுமி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து தன்னை மோசடி செய்தது தெரியவந்தது.

மூவரும் என்னை ஏமாற்றியது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டேன். அதற்காக அவர்கள் என்னையும், எனது மகள் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இது தொடர்பாக கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால் அந்தப் புகார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், 3 பேரும், காசிமேட்டில் உள்ள பிரபல ரவுடி மூலம் என்னை சுட்டுக்கொல்ல திட்டமிட்டுள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow