ஈரோட்டில் ரூ.3.75 கோடி பறிமுதல்... மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்...
ஈரோட்டில் இதுவரை ரூ.3.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்.
ஈரோட்டில் இதுவரை ரூ.3.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுங்கரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 58 புகார்கள் வந்துள்ளதாகவும், இதில் 38 புகார்கள் டோல் ஃப்ரீ என் மூலமாகவும், 17 புகார்கள் Cvigil மூலமாகவும் வந்ததாகவும் தெரிவித்தார். இந்த புகார்கள் அனைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டதாகவும் கூறினார். தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.3.75 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.1.72 கோடி உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தொண்டி சாலையில் வந்த ஸ்டீபன் தாஸ் என்பவரின் காரை நிறுத்தி அக்குழுவினர் சோதனையிட்டபோது, காரின் சீட்டிற்கு அடியில் ரூ2.5 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், பள்ளிக் கட்டணம் செலுத்தக் கொண்டு செல்வதாக ஸ்டீபன் தாஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும்,
பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் அவற்றை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, சிவகங்கை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
What's Your Reaction?