தாகத்துக்கு தண்ணீர் கொடுத்த வீட்டில்... நகை பணத்தை அபேஸ் செய்த கும்பல் ! வளைத்த போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே வெயிலுக்கு வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

May 9, 2024 - 14:44
May 9, 2024 - 15:25
தாகத்துக்கு தண்ணீர் கொடுத்த வீட்டில்... நகை பணத்தை அபேஸ் செய்த கும்பல் ! வளைத்த போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே சக்கரமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன். இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி வீட்டில் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் இவரது மனைவி, மகள் மட்டும் இருந்துள்ளனர். 

இந்நிலையில்,  அவர்களின் வீட்டருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்களும் 2 ஆண்களும் வெயில் அதிகமாக இருக்கிறது, குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. இதற்கு பரிதாபப்பட்ட  துளசிராமனின் மனைவி தண்ணீர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தண்ணீரை குடித்த 4 பேரும் வெயில் அதிகமாக இருக்கிறது, உங்கள் வீட்டின் முன்புறம் சற்று இளைப்பாறி விட்டு செல்கிறோம் என்று அமர்ந்ததாக கூறப்படுகிறது.

இதேவேளையில், கதவை திறந்து வைத்துவிட்டு அப்பெண்ணும் மகளும் வீட்டின் பின்புறம் கால்நடைகளை கவனிக்க சென்றபோது, கமுக்கமாக உள்ளே நுழைந்த 4 பேரும் பீரோவில் இருந்த நான்கு சவரன் நகை மற்றும் நான்காயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர். 

தொடர்ந்து சம்பவம் குறித்து திருவாலங்காடு போலீசாரிடம் துளசிராமன் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், கட்டிட தொழிலாளிகளான பிரியதர்ஷினி, வினிதா, ஆனந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். 

திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow