புத்தாண்டு கொண்டாட்டத்தில் 7 வயது சிறுமியை சீரழித்த காமகொடூரன்
புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின் போது சென்னையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருமங்கலத்தின் ஒரு பகுதியில் குடியிருப்புவாசிகள் ஒன்று சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தாண்டை வரவேற்கும் விதமாக, குடியிருப்புவாசிகள் ஒன்று சேர்ந்து, ‘ஸ்பீக்கர்’கள் பொருத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 7 வயது சிறுமியை காணவில்லை. புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து ஸ்பீக்கர் அணைத்த பிறகு சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு வசிக்கும் மதிவாணன் என்பவரது வீட்டில் சென்ற போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்ததை கண்டு குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து அவரை அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மதிவாணனை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமி பெற்றோருடன் வராமல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வந்தது தெரிந்து கொண்டே மதிவாணன் இது போன்ற கொடூரச் செயலை நிகழ்த்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மருத்துவ பரிசோதனை அடிப்படையில் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு மதிவாணனை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இடது கையில் மாவு கட்டுப்போட்ட படி போலீசார் மதிவாணனை அழைத்து வந்தனர்.
தப்பிச் செல்லும் போது தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மதிவாணனை நீதிமன்ற காவலில் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?

