மறுபிறவி எடுத்த ஆலமரம்.. கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மக்கள்...

Feb 28, 2024 - 14:29
Feb 28, 2024 - 14:48
மறுபிறவி எடுத்த ஆலமரம்.. கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மக்கள்...

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக பலநூறு ஆண்டுகள் பழமையான மரம் அகற்றப்பட்ட நிலையில், பசுமைத் தாயகம் மூலம் நடப்பட்ட ஆலமரத்திற்கு அப்பகுதி மக்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த இள்ளலூர் -வெண்பேடு சாலை விரிவாக்க பணியின் போது பலநூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக வெண்பேடு கிராமத்தில் பசுமைத் தாயகம் மூலம் புதிதாக ஆலமரம் ஒன்று நடப்பட்டது. இந்த மரம் நடப்பட்டு ஓராண்டு நிறைவானதை ஒட்டி, அப்பகுதி மக்கள் அகற்றப்பட்ட மரம் மறுபிறவி எடுத்திருப்பதாகக் கூறி, கேக் வெட்டி கொண்டாடினர்.

முளைக்கத் தொடங்கி இருக்கும் ஆலமரத்திற்கு மலர் தூவி, தண்ணீர் ஊற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாள்தோறும் அம்மரத்தை பராமரித்து வந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அவர்களுக்கு மரக்கன்றும் வழங்கப்பட்டது. ஒரு மரத்தை பிடுங்கினால் 10 மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற அரசின் விதியை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow