'சம வேலைக்கு சம ஊதியம்' - போராட்டத்தில் குதித்த ஆசியர்கள் கைது!

Feb 28, 2024 - 15:31
Feb 28, 2024 - 15:37
'சம வேலைக்கு சம ஊதியம்' - போராட்டத்தில் குதித்த ஆசியர்கள் கைது!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். 

தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு விதமான அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, 2009ம் ஆண்டுக்கு ஜூன் மாதத்திற்கு முன் பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், அதன் பிறகு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், உடனடியாக தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக திருப்பூரில் இன்று இடைநிலை ஆசிரியர்கள் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால், அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow