தி.மு.க-வுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம் - அண்ணாமலை கடும் தாக்கு
தி.மு.க. பேசக்கூடிய எல்லாம் செருப்புக்கு சமம் - அண்ணாமலை
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்பது மிகப்பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், பா.ஜ.க வேட்பாளர் முருகானந்திற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை பேசியதாவது, "பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி மன்றத்தில் 400 எம்.பி-க்களுடன் அமரும் போது, நம்முடைய பங்கை ஆற்ற வேண்டும் என இந்த கூட்டணி உருவாகியுள்ளது. நம்முடைய ஆட்சி விவசாயிகளுக்காக நடந்துக்கொண்டு இருக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன்னை போலி விவசாயியாக அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறார். காவிரி பிரச்னை தொடர்பான தீர்ப்பு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டாலும், ஆணையம் அமைக்கப்படவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையம் 2018ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த வரை காவிரி நீரை யாரும் தடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நீரைத் தடுப்பது மட்டுமல்லாமல், மேதாதுவில் அணையைக் கட்டுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அணையைக் கட்ட அனுமதி கிடையாது என மத்திய அரசு உறுதியாகக் கூறிவிட்டது" என தெரிவித்தார்.
மேலும் "தி.மு.க. பேசக்கூடிய எல்லாம் செருப்புக்கு சமம். இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள். அவர்களுடைய குழந்தைகளை எங்கே? அவர்கள் யாராவது தி.மு.க.,வில் பொறுப்பில் இருக்கிறார்களா? அல்லது எம்.எல்.ஏ., எம்.பி.ஆக இருக்கிறார்களா?" என வினவிய அண்ணாமலை, இப்படி போராட்டத்தில் உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்து கருணாநிதியின் வாரிசுகள் தான் இன்றைக்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு இந்தி எதரிப்பு போராட்டத்தின் போது யார் உயிரிழந்தார்களோ அவர்களை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அருகதையுமே இல்லை" என சாடினார்.
What's Your Reaction?