Andhra: லாரி மீது அதிவேகத்தில் மோதிய கார்... 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..
காரில் பயணித்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நந்தியாலா மாவட்டம் அலகட்டா மண்டலம் நல்லகட்லா என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அதிவேகமாக சென்ற கார் ஒன்று, லாரியின் பின்புறம் நிலைதடுமாறி எதிர்பாராத விதமாக மோதியதாகத் தெரிகிறது. இதில் காரில் பயணித்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அத்துடன் திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?