திருச்சி-ல ஸ்டார்ட் ஆகும் சூறாவளி சுற்றுப்பயணம்... ஈ.பி.எஸ்-ன் முதல் கட்ட தேர்தல் பரப்புரை விவரங்கள் வெளியீடு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 24-ஆம் முதல் 31-ஆம் தேதி வரை முதல் கட்டமாக சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்

Mar 18, 2024 - 20:13
திருச்சி-ல ஸ்டார்ட் ஆகும் சூறாவளி சுற்றுப்பயணம்... ஈ.பி.எஸ்-ன் முதல் கட்ட தேர்தல் பரப்புரை விவரங்கள் வெளியீடு!

திமுகவை தொடர்ந்து அதிமுகவும் திருச்சியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை துவங்குகிறது. அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வண்ணாங்கோவிலில் இருந்து சூறாவளி சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். 

மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணியும், அதைதொடர்ந்து எதிர்கட்சிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எங்கெங்கு போட்டியிடுகின்றன என்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு விட்டன. அதிமுகவில் இதுவரை கூட்டணி தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. எனினும் வருகிற மார்ச்-24ஆம் தேதி முதல் தேர்தலுக்கான சூறாவளி சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் தொடங்கவுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 24-ஆம் முதல் 31-ஆம் தேதி வரை முதல் கட்டமாக சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டு அதற்கான அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது. 

24-03-24 - 04.00 மணிக்கு - வண்ணாங்கோவில், திருச்சி 

26-03-24- 04.00 மணிக்கு - விவிடி சிக்னல், தூத்துக்குடி 
                 07.00 மணிக்கு - வாகையடிமுனை, திருநெல்வேலி 

27-03-24- 04.00 மணிக்கு - நாகர்கோவில்
                  07.00 மணிக்கு - வீரசிகாமணி சாலை, தென்காசி 

28-03-24- 04.00 மணிக்கு - சிவகாசி, விருதுநகர்
               07.00 மணிக்கு - ராமநாதபுரம் 

29-03-24- 04.00 மணிக்கு - மதுராந்தகம் 
                 07.00 மணிக்கு -  ஸ்ரீபெரும்புதூர் 

30-03-24- 04.00 மணிக்கு - கடலூர் சாலை, புதுச்சேரி 
                 06.00 மணிக்கு - மஞ்சக்குப்பம், கடலூர் 

31--03-24- 03.30 மணிக்கு - சிதம்பரம் 
                   05.30 மணிக்கு - மயிலாடுதுறை
                   07.30 மணிக்கு - திருவாரூர், நாகப்பட்டினம்

முன்னதாக, திமுக சார்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் வருகிற 22ஆம் தேதி திருச்சியில் தான் தேர்தலுக்கான பரப்புரையை துவங்கிறார். அதைதொடர்ந்து 24ஆம் தேதி எடப்பாடி கே.பழனிச்சாமியும் திருச்சியில் பரப்புரையை துவங்கிறார். இதனால் திருச்சி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow