என்னடா இது விஜய்க்கு வந்த சோதனை: கரூர் விவகாரம் தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்
கரூர் 41 பேர் பலியான விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராகமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள தகவல் அக்கட்சி தொண்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
மேலும் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இதுதொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது ”நீதி வெல்லும்” என்று தவெக தலைவர் விஜய் பதிவிட்டிருந்தார்.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதற்கிடையில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி, த.வெ.க. நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 3 நாட்கள் விசாரணை நடைபெற்றது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, தவெக தலைவர் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. வரும் ஜனவரி 12ம் தேதி விஜய் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் சம்மனில் குறிப்பிட்டு உள்ளனர்.
What's Your Reaction?

