AR Rahman: ராமாயணம் படத்தில் ஆஸ்கர் நாயகர்கள்… ஹான்ஸ் ஜிம்மருடன் இணையும் AR ரஹ்மான்!
இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கவுள்ள ராமாயணம் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்காக ஏஆர் ரஹ்மானுடன் பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
                                சென்னை: கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று மாஸ் காட்டியவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். சர்வதேச அளவில் மொசார்ட் ஆஃப் மெட்ராஸ் என கொண்டாடப்படும் ரஹ்மான், ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று வந்தார். அவருடன் இன்னொரு ஆஸ்கர் நாயகனான ஹான்ஸ் ஜிம்மர் இணையவுள்ளது இசை ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏஆர் ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இணைவது குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும், இக்கூட்டணி ராமாயணம் படத்தில் கண்டிப்பாக இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ளது ராமாயணம். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், சன்னி தியோல் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர். ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதா கேரக்டரிலும் நடிக்கின்றனர். ராவணன் கேரக்டரில் யாஷ் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு 600 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமாயணம் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், https://www.e-ijpa.com/ ஏஆர் ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இருவரும் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 
ஜெர்மனியைச் சேர்ந்த ஹான்ஸ் ஜிம்மர், தி லயன் கிங், ட்யூன் ஆகிய படங்களுக்கு ஆஸ்கர் விருது வென்றுள்ளார். அதேபோல் ஏஆர் ரஹ்மான் ஸ்லாம் டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றிருந்தார். ஆஸ்கர் தவிர மேலும் பல சர்வதேச விருதுகளை இருவரும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ஆஸ்கர் நாயகர்களும் இப்போது ராமாயணம் படத்தில் இணைவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            