அடிப்படை வசதிகள் இல்லை.. தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு

Apr 5, 2024 - 16:39
அடிப்படை வசதிகள் இல்லை.. தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு

அடிப்படை வசதிகளை செய்து தராததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முத்தனப்பள்ளி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ளது முத்தனப்பள்ளி கிராமம். மல்லபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மல்லபள்ளி ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஊராட்சி நிர்வாகத்திடம் 10 ஆண்டு காலமாக பலமுறை கோரிக்கை மனு அளித்தும், அடிப்படை வசதிகளை செய்துதர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறியுள்ளனர். இதனால் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறியுள்ள அவர்கள், கருப்புக்கொடி ஏந்தி, பச்சூர் - குப்பம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த வட்டாட்சியர் சம்பத், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். கிராம மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow