செம்படம்பரில் நல்ல செய்தி... சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த தீபிகா படுகோன்

Feb 29, 2024 - 13:31
Feb 29, 2024 - 13:32
செம்படம்பரில் நல்ல செய்தி... சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த தீபிகா படுகோன்

பாலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தீபிகா படுகோனே. ஷாருக்கானின் ஓம் சாந்தி திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் நாயகியாக அறிமுகமான தீபிகா படுகோனுக்கு ஆரம்பத்தில் அவ்வளவு எளிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஷாருக்கான் தான் தீபிகா படுகோனேவுக்கு அடுத்தடுத்து சான்ஸ் கொடுத்து பாலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வரும் அளவிற்கு ப்ரோமோஷன் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கலங்கடித்து வருகிறார்.

ஒருகட்டத்தில் ஷாருக்கானுக்கும் தீபிகா படுகோனேக்கும் திருமணம் நடைபெற போகிறது என்றெல்லாம் செய்திகள் தீயாக பரவின. ஆனால் அந்த கட்டுக் கதைகளையெல்லாம் கண்டுகொள்ளாத தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தியில் முன்னணி நடிகரான ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவை உருகி உருகி காதலித்து வந்தார். இறுதியாக இருவரும் 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தீபிகா படுகோனேவும் ரன்வீர் சிங்கும் பிரிந்துவிட்டனர் என்றெல்லாம் வதந்திகள் பரவின. பதான் படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே பிகினியில் நடித்திருந்தார். அதேபோல் ஷாருக்கானக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என பதான் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் பேசி அதிர வைத்திருந்தார். இதனால் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

இதனிடையே கடந்தாண்டு நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியொன்றிலும் ரன்வீர் சிங்குடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொள்ளாமல் தீபிகா படுகோனே விலகி நின்றதும் ரசிகர்களின் கண்களை உறுத்தின. இந்த நிலையில் தங்களை பற்றி வெளியான அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதி.

அதன்படி தங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் தீபிகா படுகோனே. இதுபற்றி ஏற்கனவே செய்திகள் வெளியாகினாலும், அதனை தீபிகா உறுதி செய்யாமல் இருந்தார். இதனையடுத்து தனது இன்ஸ்டாவில் குழந்தைகளின் ஆடைகளுடன் செப்டம்பர் 2024 என்ற போஸ்டரை அவர் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த திரை பிரபலங்களும் ரசிகர்களும் தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow