AR Rahman: AR ரஹ்மான் ஆஸ்கர் விருது சர்ச்சை… ஜெய்ஹோ பாடல் ட்யூன்… உண்மையை சொன்ன சுக்விந்தர்சிங்

ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்ற ‘ஜெய்ஹோ’ பாடலை அவர் கம்போஸ் செய்யவில்லை என இயக்குநர் ராம்கோபால் வர்மா குற்றம்சாட்டியிருந்தார். இந்த சர்ச்சை பற்றி பாடகர் சுக்விந்தர் சிங் விளக்கம் கொடுத்துள்ளார்.

Apr 22, 2024 - 17:28
AR Rahman: AR ரஹ்மான் ஆஸ்கர் விருது சர்ச்சை… ஜெய்ஹோ பாடல் ட்யூன்… உண்மையை சொன்ன சுக்விந்தர்சிங்

சென்னை: 2009ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடலுக்காகவும், பின்னணி இசைக்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்தார் ஏஆர் ரஹ்மான். ஏற்கனவே புகழின் உச்சத்தில் இருந்த ஏஆர் ரஹ்மான், ஆஸ்கர் விருதுகள் வென்ற பின்னர் இன்னும் வேற லெவலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இந்நிலையில், ஜெய் ஹோ பாடலுக்கு ஏஆர் ரஹ்மான் ட்யூன் கம்போஸ் செய்யவில்லை, அது சுக்விந்தர் சிங் போட்ட பாடல் என பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா கொளுத்திப் போட்டார்.  

இதுகுறித்து அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், ஏஆர் ரஹ்மான் பல இசைக் கலைஞர்களிடம் இருந்து பணம் கொடுத்து ட்யூன்களை வாங்கி, அதனை இயக்குநர்களுக்கு கொடுத்துவிடுவார். இயக்குநர் சுபாஷ் கை-யிடம் எனது பெயருக்கு தான் பணம் என்றும், நான் தரும் ட்யூன்கள் யாருடையதாக இருந்தாலும் அது உங்களுக்கு தேவையில்லை என்றும் ஏஆர் ரஹ்மான் கூறியதாக அந்த பேட்டியில் கூறியிருந்தார். அதேபோல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஆஸ்கர் விருது வென்ற ஜெய்ஹோ பாடலை சுக்விந்தர் சிங் தான் கம்போஸ் செய்திருந்தார். மேலும் அது சல்மான் கானின் யுவராஜ் படத்துக்கு போடப்பட்ட ட்யூன் எனவும் கூறியிருந்தார்.  

ஒட்டுமொத்தமாக ஏஆர் ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட ஆஸ்கர் விருது நியாயமாக சுக்விந்தர் சிங்கிற்கு தான் கிடைத்திருக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார். இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் இந்த பேட்டியை வைத்துக்கொண்டு ஏஆர் ரஹ்மானின் ஹேட்டர்ஸ் அவரை பயங்கரமாக ட்ரோல் செய்யத் தொடங்கினர். ஏஆர் ரஹ்மானின் இசை மோசடி இப்போது வெளியே தெரிந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த சர்ச்சை பற்றி ஏஆர் ரஹ்மான் விளக்கம் ஏதும் கொடுக்காத நிலையில், பாடகர் சுக்விந்தர் சிங் மனம் திறந்துள்ளார்.  

அதில், யுவராஜ் படத்துக்காக ஏஆர் ரஹ்மான் இசையில் குல்சார் எழுதிய ஜெய் ஹோ பாடலை இயக்குநர் சுபாஷ்கை இது செட்டாகாது என மறுத்துவிட்டாராம். ஆனால், குல்சாரோ 'தானெழுதிய அருமையான பாடல் வீணாகப் போகிறதே' என்று மிகவும் வருத்தப்பட்டுள்ளார். அவரை ஆற்றும் விதமாக, சுக்வீந்தர் சிங், தனது ஸ்டுடியோவில் வைத்து அந்த ஜெய் ஹோ பாடலை பதிவு செய்து ரஹ்மானுக்கு அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் நடந்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஏஆர் ரஹ்மான் தன்னை செல்போனில் அழைத்து, “ஹலோ ஹாலிவுட் சிங்கர்… உங்களது பாடல் ஸ்லம் டாக் மில்லினர் படத்திற்குப் போயிருக்கிறது" எனக் கூறியுள்ளார். 

அதன் பின்னர் தான் இந்தப் பாடலுக்காக ஏஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஜெய் ஹோ பாடலை சர்ப்ரைஸ்ஸாக பாடிக் கொடுத்தது நான் தான், ஆனால், அந்த ட்யூனை கம்போஸ் செய்தது ஏஆர் ரஹ்மான் தான் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சுக்விந்தர் சிங். ஏஆர் ரஹ்மான் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள சுக்விந்தர் சிங், ரஹ்மான் தான் என்னை பாடகராக களமிறக்கி வளர்த்துவிட்டவர் எனவும் நெகிழ்ச்சியுடன் பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow