அட்சய திருதியை நாளில் ராஜயோகம்.. குரு சந்திர யோகத்தால் குபேரன் அருள் யாருக்கு கிடைக்கும்?

அட்சய திருதியை நாளான நாளைய தினம் (மே 10) அற்புதமான யோகங்கள் கூடி வரப்போகிறது. குருவும் சந்திரனும் ரிஷப ராசியில் இணைந்திருக்கும் நாளில் உருவாகும் இந்த ராஜயோகத்தினால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான யோகங்கள் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

May 9, 2024 - 11:09
அட்சய திருதியை நாளில் ராஜயோகம்..  குரு சந்திர யோகத்தால் குபேரன் அருள் யாருக்கு கிடைக்கும்?

குரு பகவான் நவகிரகங்களில் முதன்மையானவர். குருபகவான் பல வித யோகங்களைத் தரக்கூடியவர். குருவின் பார்வை கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும். குருபகவான் இப்போது ரிஷப ராசியில் பயணம் செய்யும் இந்த சமயத்தில் வரக்கூடிய அட்சய திருதியை நாள் அபூர்வமான ராஜயோகத்தையும் கொடுக்கப்போகிறது. 

2024 ஆம் ஆண்டு அட்சய திருதியை நாளைய தினம் ( மே 10) கொண்டாடப்படுகிறது. குருவும் சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகத்தை கொடுக்கும். அதுவும் சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசியில் குரு பகவான் இணைந்து பயணம் செய்யும் நாளில் அட்சய திருதியை வரப்போவது சிறப்பு. ஜாதகத்தில் சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தாலும், குரு இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 ஆகிய குருவின் பார்வையில் சந்திரன் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. 

ராஜயோகங்கள்: நாளைய தினம் மேஷத்தில் சூரியன் உச்சம், ரிஷபத்தில் சந்திரன் உச்சம், சனி பகவான் தன் சொந்த ராசியான கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் ஷஷ யோகம் தருகிறார்.  மேஷ ராசியில் சூரியன் சுக்கிரன் கூட்டணியால் சுக்கிர ஆதித்யராஜ யோகம் உருவாகிறது. இந்த  ராஜ யோகங்களால் ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் அட்சய திருதியை நாள் அற்புத பலன்களை தரப்போகிறது.   கோடீஸ்வர யோகத்தை தேடித்தரப்போகிறது.

மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் குருவும் சந்திரனும் இணைந்து பயணம் செய்வதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது. பண வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும். அட்சய திருதியை நாளில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 

கடகம்: லாபம் நிறைந்த நாள். அட்சய திருதியை நாளான நாளைய தினம் ( மே 10) 11 ஆம் வீடான லாப வீட்டில் சந்திரனும் குருவும் இணைந்து பயணம் செய்கின்றன. செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். திடீர் வருமானம் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நாளைய தினம் புதிய தொழில் தொடங்கலாம்.

கன்னி: உங்கள் ராசியில் கேது பயணம் செய்யும் இந்த காலத்தில் பாக்ய ஸ்தானத்தில் குருசந்திர யோகம் கூடி வரும் நாளில் அட்சய திருதியை வருகிறது. இந்த நாளில் வெற்றிகளும் உயர்வுகளும் தேடி வரப்போகிறது. நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உயர்வுகள் தேடி வரக்கூடிய நாளாக அட்சய திருதியை நாள் அமைந்துள்ளது. 

விருச்சிகம்: களத்திர ஸ்தானத்தில் குருவும் சந்திரனும் இணைந்து பயணம் செய்யும் நாளில் நிகழும் அட்சய திருதியை அற்புதமான யோகத்தை தரப்போகிறது.  சந்திரனின் பார்வையும் குருவின் பார்வையும் கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது. பண வருமானம் செழிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். 

மகரம்: அட்சய திருதியை நாளில் அற்புதமான யோகம் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கப்போகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் நிகழும் குரு சந்திர யோகம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரப்போகிறது. பணம் பல வழிகளிலும் வரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow