தமிழ்நாட்டில் திமுகவுக்குத்தான் எதிர்ப்பலை... மோடிக்கு ஆதரவு அலைதான்! - டிடிவி தினகரன் பளிச்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலைதான் வீசுவதாகவும், அதனால் அதிருப்தியில் இருக்கும் மக்களின் வாக்குகளை பாஜக பெறும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

Apr 7, 2024 - 08:32
தமிழ்நாட்டில் திமுகவுக்குத்தான் எதிர்ப்பலை... மோடிக்கு ஆதரவு அலைதான்! - டிடிவி தினகரன் பளிச்

 

தஞ்சாவூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து, ஒரத்தநாடு அண்ணாசிலை அருகே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், காலத்தின் சதியால் தாமும் ஓ.பன்னீர் செல்வமும் பிரிந்திருந்தோம் என்றும், தற்போது ஒன்று சேர்ந்திருக்கும் தங்களை யாரும் பிரிக்க முடியாது என்றும் பேசினார். மேலும், இத்தேர்தலில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பல இடங்களில் போட்டியிடுகிறார்கள், ஆனால் பழனிசாமி அணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் போட்டியிடக்கூட அஞ்சுகிறார்கள் என்று விமர்சித்தார். 

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டிய டிடிவி தினகரன், அதனால் மக்கள் ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர் என்று பேசிய அவர், திமுகவிற்கு எதிரான வாக்குகள் பாஜகவிற்கு வந்து சேரும் என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், அதை தடுத்து, வாக்குகளை பிரிப்பதற்கும் திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு பழனிசாமி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும் சாடினார்.

திமுகவிற்கு எதிராக கட்சி ஆரம்பித்தார் எம்ஜிஆர்.  அதே திமுகவிற்கு ஆதராவாக செயல்படுகிறார் துரோகி பழனிச்சாமி. இவர்களின் இத்தகைய செயலால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 3 வது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் பேசிய டிடிவி தினகரன், அதிமுகவை மீட்டெடுக்கத் தாமரையில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow