நடிகரின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய மனைவி : திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது
இந்தி திரையுலகில் முன்னணி நடிகரான கோவிந்தா பணத்துக்காக பழகும் பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி சுனிதா அஹுஜா கூறியுள்ள குற்றச்சாட்டு பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.
பாலிவுட் நடிகர் கோவிந்தா மற்றும் அவரது மனைவியான சுனிதா தம்பதியினருக்கு திருமணமாகி 37 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2024ம் ஆண்டு முதலே இவர்களது திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
இருவரும் விரைவில் விவாகரத்து பெறப்போவதாகவும் பல்வேறு செய்திகள் தொடர்ந்து பரவி வந்தன. இந்த நிலையில், இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் நடிகர் கோவிந்தா தனது மனைவியுடன் கலந்து கொண்டு வதந்திகளை பொய்யாக்கினர்.
இருப்பினும், இந்த ஆண்டு தங்களது குடும்பத்திற்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துவிட்டதாகவும், இது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுனிதா வேதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள சுனிதா, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘என் கணவர் வேறொரு பெண்ணுடன் (கள்ளத்தொடர்பு) பழகி வருகிறார். அந்த பெண் அவரை நேசிக்கவில்லை, பணத்திற்காக மட்டுமே பழகுகிறார். நடிகைகள் மீது எனக்கு மரியாதை உண்டு, ஆனால் தவறான எண்ணம் கொண்ட பெண்களை ஏற்க முடியாது. என ஆவேசமாக கூறியுள்ள அவர்.
‘பணத்துக்காக மட்டும் உடன் இருக்கும் ஜால்ராக்களிடம் இருந்து அவர் விலகி, குடும்பம் மற்றும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றும் கணவர் கோவிந்தாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 2026ம் ஆண்டிலாவது இந்த சர்ச்சைகள் அனைத்தும் ஓய்ந்து, நிம்மதி மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

